திரிஷாவின் ஆக்சனை பார்த்து பதறிப்போன அம்மா உமா கிருஷ்ணன்!

மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா, சமீபகாலமாக அதிரடியான வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, தனுசுடன் நடித்த கொடி படத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடி வில்லியாக நடித்திருந்தார் திரிஷா.

அதையடுத்து திரிஷாவைத்தேடி ஆக்சன் கலந்த வேடங்கள் செல்லத் தொடங்கின. அந்த வகையில், நாயகி படத்தை அடுத்து சதுரங்கவேட்டை-2, மோகினி, கர்ஜனை என பல படங்களில் நடித்து வரும் திரிஷா, கர்ஜனை படத்தில் ஆக்சன் காட்சியிலும் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் திரிஷா ஆக்சன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது ரொம்ப சந்தோசப்பட்டாராம் அவரது அம்மா உமா கிருஷ்ணன். ஆனால், பின்னர் திரிஷா சண்டை காட்சிகளில் நடிக்கப்போகிறார் என்றதும் அவரை பயம் பற்றிக்கொண்டதாம்.

சண்டை காட்சியில் திரிஷா ரோப்பில் தொங்கியபடி நடித்ததைப் பார்த்து ஆடிப்போன அவர், ஸ்பாட்டில் அமர்ந்தபடி திரிஷாவுக்காக பிரேயர் பண்ணிக்கொண்டேயிருந்தாராம். அதையடுத்து திரிஷா எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடித்து விட்டு வந்தபோது ஓடிச்சென்று அவரை கட்டித்தழுவிக்கொண்டாராம் தாய்குலம்.

Related Posts