தியேட்டர்களை சிரிப்பொலியில் அதிரவைக்க வருகிறார் கமல்!

அமுதேஷ்வர் இயக்கத்தில் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சவேரி, பூஜாகுமார், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள படம் மீன் குழம்பும் மண்பானையும்.

ஒரு தமிழ் குடும்பம் மலேசியாவில் ஓட்டல் நடத்தும் கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது.

முக்கியமாக மண்பானையில் செய்யப்படும் மீன்குழம்பின் சுவையை பிதானப்படுத்தும் இந்த படத்தில் கமல்ஹாசன் நட்புக்காக நடித் துள்ளார்.

இந்த படத்தில் நடிக்க சிவாஜிகணேசனின் மகன் ராம்குமார், கமலை அழைத்தபோது, மறுபேச்சில்லாமல் உடனே சம்மதம் சொன்னாராம்.

அதேபோல் சொன்னபடி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டாராம். மேலும், இந்த படத்தில் விவேகானந்தர் அணிவது போன்று ஒரு காஸ்டியூம்தான் கமலுக்கு கொடுக்கப் பட்டுள்ளதாம்.

ஆனால், அந்த காஸ்டியூமை அவரிடம் கொடுத்தபோது அது சிவப்பு கலரில் இருந்ததால், இந்த கலரை வெள்ளையாக மாற்றி விடுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம் கமல்.

அதன்பிறகு அதே வடிவிலான உடையை ஒயிட்டாக மாற்றிய பிறகு அதை அணிந்து நடித்துள்ளார் கமல்.

கதைப்படி, ஒரு காட்சியில் மட்டுமே கமல் நடித்தபோதும், கலகலப்பூட்டும் வகையில் நடித்திருக்கிறாராம். அந்த காட்சியில் தியேட்டர்களே சிரிப்பொலியில் அதிரும் என்கிறார்கள்.

Related Posts