தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை….
தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
யாழ் மாவட்டம்
2017 புரட்டாதி 24
தியாகி திலீபன் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள்
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் இந்திய அரசிடம் நீதி கோரி காந்திய வழியில் நீராகாரம் அருந்தாது தன்னுடலை மெழுகாய் உருக்கி எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகச் செம்மல் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் நடாத்துவதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வுகள் முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகும். இந்நிகழ்வில் பொது மக்கள் அரச அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை சார்ந்தவர்கள் மற்றும் பொது அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறித்த நிகழ்வில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் ஆவன செய்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
திகதி: 26-09-2017 செவ்வாய்க்கிழமை
நேரம்: முற்பகல் 10.30 மணி
இடம்: தியாகி திலீபன் நினைவுத்தூபி பருத்தித்துறை வீதி நல்லூர்.
நன்றி
இணைப்பாளர்
தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு: 0764191267