தியாகி திலீபனின் நினைவுத் தூபியை புனரமைக்கும் பணி மாநகரசபையிடம் ஒப்படைப்பு!

தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியை புனரமைக்கும் பணி யாழ். மாநகரசபையிடம் நேற்றய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடமாகாண முதலமைச்சர் தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவு தூபி அமைந்துள்ள காணி மாநகரசபையால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட காணி. அன்று எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அப்பகுதியில் அமைத்திருந்தோம். ஆனால் தற்போது காணி உரிமையாளர்களின் எதிர்ப்பு இல்லை அதை புனரமைப்பு செய்யலாம். அவர்களின் அனுமதி இன்றி நிரந்தர கட்டடம் அமைக்க முடியாது.

இதை பிரச்சனைபடுத்தாமல் கோவில் நிர்வாகத்தினருடன் பேசி எழுத்து மூலம் அனுமதி எடுத்த பின்னர் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிக்கையில்,

நான் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் இத்தூபியை புனரமைக்க 2 இலட்சம் ஒதுக்கியிருந்தேன். வேலை நடக்கவில்லை. பெரியளவில் இதனைச் செய்யாமல் உடைந்திருப்பதைப் புனரமைப்புச் செய்தாலே போதும் எனத் தெரிவித்தார்.

வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்தெரிவிக்கையில்,

இத்தூபியை அமைப்பதற்கு நல்லூர் ஆலய நிர்வாகம் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காது என்பதில் உறுதியாக உள்ளோம். நான் அதற்குரிய எழுத்துமூல அனுமதியைப் பெற்றுத் தருகிறேன் எனத் தெரிவித்தார்.

Related Posts