தியாகி திலீபனின் நினைவுத்தூபியை புனரமைக்க நடவடிக்கை

யாழ். நல்லூர் பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ். மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார்.

தியாகி திலீபனின் நினைவிடம் எவ்வித பாதுகாப்பு வேலிகளும் இன்றி வெறுமனே காணப்படும் நிலையில், அதற்கு எல்லைகளை போட்டு பாதுகாப்பு வேலியொன்றை அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார்.

குறித்த கடிதத்தின் பிரதியொன்றை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவைத்தலைவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்களின் உரிமைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுதினம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts