தியாகதீபம் திலீபனின் நான்காம் நாள் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது

இன்று (திங்கட்கிழமை) யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலமையில் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆர்.கஜன் அவர்களின் வழிகாட்டலில் இன்றைய தின நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts