திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Posts