கொழும்பு-10 இல் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு, அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று வியாழக்கிழமை(17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த திணைக்களத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் நாவின்ன இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள காவலாளியொருவர், 500 ரூபாய் இலஞ்சம் வாங்கியதை தான் பார்த்ததாக புத்திக பத்திரண எம்.பி தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நாவின்ன, திணைக்களம் செத்சிறிபாயவுக்கு மாற்றப்பட்டதன் பின்னர், இவ்வாறான நடவடிக்கைகளை முற்றிலும் ஒழித்துவிடமுடியும் என்றார்.