Ad Widget

திட்டமிட்டபடி வடக்கு மக்களுக்கான நவீன சத்திரசிகிச்சை பிரிவு அமையவுள்ளது!

மருத்துவ பீட கற்கைநெறி கட்டடத் தொகுதி போதனா வைத்தியசாலை (Professorial Department Complex Teaching Hospital Jaffna)

மேற்படி கட்டிடத் தொகுதி ஆனது யாழ் போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் மருத்துவப் பீடத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 பரப்பு காணியில் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடத் தொகுதி உயர்கல்வி அமைச்சின் 720 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட உள்ளது. 8 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத் தொகுதியில் மருத்துவ பீட கற்கை நெறிகளுக்கான பல்வேறு பிரிவுகளின் காரியாலய அலகுகளும் மாணவர்களுக்கு கற்கை வசதி வழங்கக் கூடிய அலகுகளும் அமைய உள்ளது.

இக்கட்டிட அமைப்பு வேலைகள் பூரணமாக யாழ் மருத்துவ பீட நிருவாகத்தின் கீழ் அமையும். எனினும் நோயாளர் சேவை பிரிவுகள் இயங்கும் போது அவை முழுமையாக வைத்தியசாலைப் பணிப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

இக்கட்டிடத்தின் ஒரு தட்டில் அமைய இருக்கும் சத்திர சிகிச்சைக் கூடமும் மற்றும் ஆய்வு கூட வசதியும் பற்றி கருத்து முரண்பாடு எழுந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து சுமூகமான ஒர் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் சில பத்திரிகைகள் மற்றும் வேறு ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்டு செய்திகள் வெளிவந்தன. எனினும் அவ்வாறு இக்கட்டிடத் தொகுதியினைக் கட்டுவதற்கு வைத்தியர்களோ ஏனையவர்களோ முட்டுக்கட்டை ஏற்படுத்தவில்லை. அத்துடன் இக்கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு அனைத்து ஊழியர்களும் பூரண ஆதரவை வழங்குவார்கள் என தெரியப்படுத்தி இருந்தனர் பணிப்பாளர்.

தொடர்புடைய செய்தி

வடக்கு மக்களுக்கான நவீன சத்திரசிகிச்சை பிரிவிற்கு சில வைத்தியர்கள் எதிர்ப்பு

Related Posts