திங்கட்கிழமை முதல் பாணின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து (21) பாணின் விலையை 3 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரிமா நிறுவனம் கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 7 ரூபா 20 சதமாக அதிகரித்ததாலும் பின்னர் நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு மீண்டும் அது குறைக்கப்பட்டது.

நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த கோதுமை மாவின் விலையை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளமை தொடர்பில் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையையும் 3 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் விலையை அதிகரிக்கும் பட்சத்தில் கட்டாயம் பாணின் விலை அதிகரிக்கும் என பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகருக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts