திகன நகரிலிருந்து இரு ஆண்களின் சடலங்களை, பொலிஸார் நேற்று காலை மீட்டுள்ளனர். 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உட்பட இருவரின் சடலங்களே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை திகன சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 24 பேரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக,பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.