தாவர விற்பனையாளர்களுடன் வடக்கு விவசாய அமைச்சரின் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் பயன்தரு மரங்களையும் அலங்காரத் தாவரங்களையும் உற்பத்தி செய்பவர்களையும் அவற்றை விற்பனை செய்பவர்களையும், வண்ணமீன் மற்றும் செல்லப்பிராணிகள் விற்பனையாளர்களையும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Ainkaranesan

இச்சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (28.09.2014) காலை 10.00 மணிக்கு 295, கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள விவசாய அமைச்சரின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

உற்பத்தி செய்வதிலும் விற்பனை செய்வதிலும் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், விற்பனைக் கண்காட்சி, பிறமாகாணங்களில் இருந்து வரும் அலங்காரச் செடி விற்பனையாளர்களால் ஏற்படும் சவால்கள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட உள்ளதால் சகல பண்ணையாளர்களையும் இக் கலந்துரையாடலில் தவறாது கலந்து கொள்ளுமாறு விவசாய அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts