தபால் அதிபர் மற்றும் ஆசிரியையின் கைப்பைகள் அபகரிப்பு

robberyபாடசாலை விட்டு கணவரின் வரவுக்காக வீதியில் காத்திருந்த ஆசிரியையின் நகைகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று மானிப்பாய் தாவடியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சையிக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரே சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை வைத்திருந்த அவருடையை கைப்பையை பறித்தெடுத்துச் சென்றுள்ளார்கள்.

மானிப்பாய் தாவடி வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்திறக்கு அருகாமையில் இவ் சம்பவம் இடம் பெற்றது.

மோட்டார் சைக்கிள் இலக்கத்தை மறைத்து வண்ணம் மிகவேகமாக வந்த இருவர் கைப்பையை பறித்துக் கொண்டு தாவடி சந்தியூடாக தப்பி சென்றுள்ளார்கள்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஆசிரியையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்,சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

தபால் அதிபரின் கைப்பை அபகரிப்பு

மானிப்பாய் தபால் அதிபர் தபால் கந்தோரை பூட்டிவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் தபாலதிபரின் சைக்கிள் கூடையில் இருந்த கைப்பையை பறித்தெடுத்துக் கொண்டு சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் தாவடி மானிப்பாய் வீதியில் உள்ள தேவாலயத்திறக்க அருகாமையில் இடம் பெற்றது.

மானிப்பாய் தபாலகத்தின் தபாலதிபர் தனது கைப்பையில் தபாலகத்தின் திறப்புக்கோர்வைகள் மற்றும் பாதுகாப்புப் பெட்டகத்தின் திறப்புகள் கையடக்கத் தொலைபேசி தனது சொந்தப் பணம் ஐயாயிரம் ரூபா என்பவற்றை கைப்பையில் வைத்து சைக்கிள் கூடையில் வைத்த வண்ணம் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில்,மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் தபாலதிபரின் சைக்கிள் கூடையில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்கள்.

இது சம்பந்தமாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மானிப்பாய் தபாலகத்திற்க்கு திங்கள் கிழமை இரவு மானிப்பாய் பொலிசார் காவல் கடமைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts