தாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி இது.

baby_glass-google

இதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16 ஜி.பி. சேமிப்பு வசதியும் கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது. 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா, வீடியோ பதிவு கருவிகள், வை-ஃபை, புளூடூத் தொடர்பு வசதிகள், 24 மணி நேர பேட்டரி சேமிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் 42 கிராம் எடை ஆகிய அம்சங்கள் கொண்ட கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்காக வரவிருக்கும் ஒரு வரப்பிரசாதம்.

இந்த கூகுள் கிளாசை பயன்டுத்தி குழந்தையை பெற்ற தாய் ஒருவர் தனது குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் குழந்தையின் அசைவுகளை பார்க்க முடியும். அந்த வகையில் வாஷிங்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்று, படுக்கையில் இருந்தவாறே தாய் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தையை கூகுள் கிளாஸ் மூலமாக பார்க்க பரிசோதனை முயற்சி செய்ய உள்ளது.

இந்த பரிசோதனை முயற்சி அடுத்த வாரம் பிரிகாம் பெண்கள் மருத்துவமனையில் நடக்க உள்ளது. பிரிகாம் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ஸ்டீபனி ஷைன் இந்த சோதனை முயற்சிக்கு பரிந்துரை செய்துள்ளார். இவரது குழந்தை 101 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறது.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளால் உடனடியாக அவை தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறது. என்ன தான் மருத்துவர்களும், நர்சுகளும் தனது குழந்தையை அக்கறையுடன் பார்த்துக்கொண்டாலும், பெற்ற தாயின் மனம் பரிதவிக்க தானே செய்யும். அப்படி தான் 101 நாட்கள் தனது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது ஷைனும் பரிதவித்திருப்பார்.

ஷைனி மட்டுமல்ல, அவரை போல நூற்றுக்கணக்கான குழந்தைகள் தாயிடமிருந்து பிரிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறது. அவர்கள் படும் வேதனைக்கு கூகுள் கிளாஸ் ஆறுதல் அளித்து புதிய அனுபவத்தை தருகிறது. அதன்படி கூகுள் கிளாஸ் அணிந்த நபர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைவார். அங்கு அவர் பார்க்கும் காட்சிகளை படுக்கையிலிருக்கும் தாய் தன் கையில் வைத்திருக்கும் டேப்லட் ஃபோனின் உதவியுடன் பார்த்து மகிழ்வார். இது குழந்தையுடன் தானும் ஒரே அறையில் இருப்பதைப் போன்ற உணர்வை தாய்க்கு தரும்.

எனவே தாயின் மன உளைச்சலை கூகுள் கிளாஸ் வெகுவாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts