தாய்வானில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக தாய்வானில் உள்ள கட்டடங்கள் பல தரைமட்டம் ஆகியுள்ளதுடன் இடிந்து விழுந்துள்ள கட்டிடங்கள் உள்ளே மக்கள் சிக்கியிருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து தாய்வானின் மத்திய வானிலை நிர்வாகம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வடக்கு கடலோர பகுதியில் சுனாமி அலைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மியாகோஜிமா மற்றும் ஒகினாவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related Posts