தாய்ப்பாசத்தை சித்தரிக்கும் வேடத்தில் மீண்டும் ஜோதிகா

ஜோதிகா, திருமணமாகி 8 வருட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் கடந்த வருடம் வெளியாகி வசூல் குவித்தது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டுஆர்யூ’ என்ற படத்தின் தமிழ் பதிப்பாக இதனை தயாரித்து வெளியிட்டனர். அதன் பிறகு புதிய படத்தில் நடிக்க ஜோதிகா கதை கேட்டு வந்தார்.

jyotikha

‘குற்றம் கடிதல்’ என்ற படத்தை இயக்கி பிரபலமான டைரக்டர் பிரம்மா.ஜி சொன்ன கதை ஜோதிகாவுக்கு பிடித்தது. அதில் நடிக்க சம்மதித்தார். இதைத்தொடர்ந்து படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து முடிவடைந்துள்ளது. தற்போது படவேலைகள் தொடங்கி உள்ளன.

இந்த படத்தில் நடிக்கும் ஜோதிகா மற்றும் இதர நடிகர்-நடிகைகளுக்கு 20 நாட்கள் நடிப்பு பயிற்சி அளித்து படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் திட்டமிட்டு பயிற்சிகளை அளித்து வருகிறார். இந்த பயிற்சி முடிந்ததும் விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தாய்ப்பாசத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இதில் கிராமத்து அம்மா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

Related Posts