தாய்க்கு உணவளிக்காமல், நிர்வாணமாக அடைத்துவைத்திருந்த மகள் கைது!

வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார்.

உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், பொலிதீனால் நிர்வாணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts