தந்தையுடன் இணைந்து வாழ வழியமைக்குமாறு கோரி அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் கொழும்பிற்கு சென்றுள்ளனர்.
கொழும்பிற்கு சென்றுள்ள அவர்கள் இன்று (சனிக்கிழமை) வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஆனந்தசுதாகரின் விடுதலைக்காக பல்வேறுபட்ட தரப்பினர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தந்தையை மீட்கும் முயற்சியில் அவரது பிள்ளைகள் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் கடந்த பத்து வருடங்களாக சிறையில் வாடி வருகின்ற நிலையில், அவரது மனைவி அண்மையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.