கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனின் குடும்பத்துக்கு முப்பது இலட்சம் ரூபா இழப்பீட்டை ஓப்பந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்த கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் (வயது – 19) என்ற இளைஞன் கடந்த 8ஆம் திகதி தாமரை கோபுரத்தின் 16ஆவது மாடியில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்த பகுதிக்குள் சென்று கீழே வீழ்ந்ததில் உயிரிழந்தார்.
சீனா மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு ஒப்பதந்த நிறுவனங்கள் தாமரை கோபுரத்தின் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.
எனவே உயிரிழந்த இளைஞனின் குடும்பத்துக்கு அந்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு என்பனவாக முப்பது இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளன.
இந்த பணம் நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன என நிதர்சனின் குடும்பத்தினர் தெரிவித்தனா்.