தாதியர் பயிற்சிக்காக 1000 பேரை இணைத்துக்கொள்ள திட்டம்

மாணவ தாதியர் பயிற்சிக்காக 1000 மாணவ மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்கி தரமான சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக சுகாதார சேவையின் மனித வளங்கள் அதிகரிப்பது இந்த திட்டத்தின் குறிக்கோளாக இருக்கின்றது.

3 வருடங்களின் பின்னர் அந்த மாணவ தாதியர்கள் நாடு பூராகவும் உள்ள போதனா வைத்தியசாலைகள், ஆரம்ப வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகள் உட்பட சுகாதா நிலையங்களில் சேவைகளில் இணைத்துக் கொள்ளப்படுவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts