தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதிகளில் இருவேறு வெடிப்பு சம்பவம்

தாஜ்மஹால் அமைந்துள்ள வெவ்வேறு பகுதிகளில் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவங்களின் போது எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தின் அருகாமையில் இன்று (சனிக்கிழமை) அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்ததாக குறிப்பிடப்படுகின்றன.

இதன்போது, குப்பைத்தொட்டி ஒன்றிலும் வீட்டு மாடி ஒன்றிலும் பொருட்கள் வெடித்ததாகவும் இதில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தாஜ்மஹால் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts