தாஜ்மஹாலின் பளிங்குச் சுவர்களை சுத்தம் செய்ய நடவடிக்கை

இந்தியாவின் மிகப் பிரபலமான சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வெண் பளிங்கு கற்கள் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக மஞ்சள் பூத்திருப்பதால், அதன் சுவர்கள் சேறு பூசி சுத்தம் செய்யப்படவுள்ளன.

e-jaffna_taj_mahal_india

சுண்ணாம்புச் சத்து நிறைந்த சேற்றை சுவர்களில் மெழுகினால் பளிங்கு கற்கள் அதன் இயற்கையான பொலிவை மீண்டும் பெரும் என்று இந்திய தொல்லியல் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜ்ஜுக்காக கட்டப்பட்ட காதல் சின்னம் தாஜ்மஹால்.

சேறு மெழுகும் முறையைப் பயன்படுத்தி தாஜ்மஹால் சுத்தம் செய்யப்படுவது இது நான்காவது முறை.

தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகரம், அதிகமான மாசை வெளியேற்றும் பல தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts