தாஜூடின் மரணத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உத்தரவு!

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட சிசிடீவி கெமரா பதிவுகளை வௌிநாட்டுக்கு அனுப்பி பரிசோதனை செய்யும் விடயம் தொடர்பில், அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவலளித்துள்ளார்.

குறித்த சிசிடீவி கெமரா பதிவுகளை வௌிநாட்டுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, சில ஊடகங்களில் செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர், அது பொய்யான தகவல் எனவும் குறிப்பிட்டார்.

Related Posts