றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டபோது அவரின் சிநேகிதிக்கு தாஜூதீனின் மரண ஓலத்தை தொலைபேசி மூலம் கொலைகாரர்கள் கேட்க வைத்தனர். அத்துடன் இந்தக் கொலைக்காக 7 வெள்ளை வான்கள் பயன்படுத்தப்பட்டன என விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதுவரை காலமும் இந்தச் சம்பவத்தை விபத்து என்று தெரிவித்துவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இப்போது இதனைக் கொலை என்று தெரிவித்திருப்பதோடு, அது குறித்த விசாரணைகளையும் முன்னெடுப்பதாகவும் உறுதியளித்திருப்பதை சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வசீம் தாஜுதீனைக் கொலை செய்யும்போது அவரது சிநேகிதியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய கொலைகாரர்கள், மரண ஓலத்தை அதனூடாக கேட்கச் செய்தார்கள் என்ற விடயமும் தற்போது வெளியாகியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.