தாக்குதல் நடத்தியோர் பயணித்த வான் வெள்ளவத்தையில் மீட்பு: சாரதியும் கைது

கொழும்பில் குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேகநபர்கள் பயன்படுத்திய வான் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிசிரிவி காணொலிகள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் வான் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

இதேவேளை, தாக்குதல்களுக்கு காரணமான குழுவின் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, பொதுமக்களுக்கு உண்மை வெளிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts