தாக்குதல் அச்சத்தால் தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்கள்!

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வங்கிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிடருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூமு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்சோ என்ற 22 வயது மீனவர் உயிரிழந்தார்.

இலங்கை கடற்படையின் இந்த துப்பாக்கிச்சூடு வேட்டை தமிழக மீனவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வன்முறைகள் நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம், இலங்கை வங்கிகள், எழும்பூரில் உள்ள புத்த விஹார் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Posts