தாக்குதல்களுக்கு மத்தியிலும் 4வது நாளாக தொடரும் வலி வடக்கு மக்களின் போராட்டம்

இன்றும் நான்காவது நாளாக பல அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வலி வடக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

maviddapuram-arppaddam-3

வலி. வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளையும் விடுவிக்குமாறு கோரி கடந்த நான்கு நாட்களாக இப் போராட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களின் வாகனங்கள் தாக்குதலுக்குள்ளானதுடன் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.

இன்று இப் போராட்த்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

maviddapuram-15-111

maviddapuram-15-112

maviddapuram-15-113

maviddapuram-15-114

maviddapuram-15-115

maviddapuram-15-116

Related Posts