தவறணையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது

கிளிநொச்சி பிரமந்தனாறு நாதன் திட்டப் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை (23) இரவு 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த தர்மரத்தினம் தர்மசீலன் (வயது 32) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கல்லாறு பகுதியிலுள்ள தவறணையில் திங்கட்கிழமை (23) மாலையில் சில நபர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மேற்படி குடும்பஸ்தரின் வீட்டுக்குள் திங்கட்கிழமை (23) இரவு நுழைந்த கும்பலொன்று குடும்பஸ்தரை வாளால் வெட்டிக் கொலை செய்தது.

சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts