வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஹக்கர்ஸ்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முடக்கப்பட்டுள்ளது.
தான் உக்ரைனில் இருந்த காலப்பகுதியில், தன்னுடைய மின்னஞ்சல் முடக்கப்பட்டதாகவும் இதனால் தன்னுடைய மின்னஞ்சல் மூலமான தொடர்புகள் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து, தற்போது புதிய மின்னஞ்சலை பயன்படுத்தி வருவதாக தவராசா மேலும் கூறினார்.