தல 57 பூஜையுடன் இன்று தொடக்கம்

‘வேதாளம்’ படத்திற்கு பிறகு அஜித், தன்னுடைய காலில் ஏற்பட்ட வலியால் அதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். டாக்டர்கள் அவரை 3 மாத காலம் ஓய்வெடுக்கச் சொல்லி வலியுறுத்தியதால் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.

ajith

இதற்கிடையில், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மறுபடியும் ‘சிறுத்தை’ சிவாவுக்கே வழங்கியிருந்தார். அஜித் ஓய்வில் இருக்கும்போதே இப்படத்திற்கான கதை எழுதும் பணிகளில் சிவா மும்முரமாக வேலை பார்த்து வந்தார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தமானார்.

இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்தாலும் படம் எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், இன்று இப்படத்தின் பூஜையை நடத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பூஜையை அடுத்து படப்பிடிப்பு எப்போது தொடங்குவார்கள் என்பதை பிறகு அறிவிப்பார்கள் என தெரிகிறது. இப்படம் அஜித்துக்கு 57-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts