‘தல 57’ படத்தில் அஜீத் இரட்டை வேடம்?

தல 57 படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ajith

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 57. இன்டர்போல் ஏஜெண்டாக நடிக்கும் அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா அஜீத்தின் உதவியாளராக நடிக்கிறார்.

தமிழ்நாட்டில் நடக்கும் கொலையை விசாரிக்க அஜீத் பல நாடுகளுக்கு செல்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது.

இந்நிலையில் தல 57 படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிவா உறுதிப்படுத்தவில்லை. துப்பறியும் கதையில் அஜீத் இரண்டு வேடங்களிலா? மற்றொரு அஜீத் என்னவாக இருப்பார் என்பது தெரியவில்லை.

சிவா அறிவிக்கும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

Related Posts