தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு பெரும்பாலும் அஜித் தான் ரோல் மாடல். அந்த வகையில் நடிகர் விதார்த் சமீபத்தில் அஜித் புராணம் பாடியுள்ளார்.
இதில் இவர் பேசுகையில் ‘கோவையில் சாதரண ட்ரைவராக இருந்த நான் இன்று சினிமாவில் ஹீரோ என்பதே பெரிய வெற்றி தான்.
மேலும் தல என்னிடம் சொன்னது போல் எனக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்வேன், தேவையில்லாத பில்டப்புகளுக்கு என் படங்களில் இடமில்லை’ என்று கூறியுள்ளார்.