தலைவர் வே. பிரபாகரன் அவர்களினால் தேர்வு செய்யப்பட்ட ஓரேயொரு முதலமைச்சர் நான் தான் : சி.வி.கே.

வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக வரக்கூடியவர் இந்த மண்ணில் இருப்பவராகவும், மண்ணுக்காக பாடுபட்டவராகவும், அரசியல் மற்றும் நிர்வாகங்கள் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் பங்குபற்றி கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் வே. பிரபாகரன் அவா்களினால் தோ்வு செய்யப்பட்ட ஓரேயொரு முதலமைச்சர் என்ற பெருமையை கொண்டுள்ள தன்னை, முதலமைச்சா் வேட்பாளராக்க தமழிரசுக் கட்சித் தலைமை தீர்மானித்தால், அதனை எற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாவும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போதைய வடக்கு மாகாண சபை செயற்பாடுகளிலும் முதலமைச்சா் சி.வி. விக்னேஸ்வரன் அவா்களுடைய செயற்பாடுகளிலும் தமிழரசுக் கட்சி அதிருப்தியடைந்துள்ள போதிலும், அடுத்த ஒரு வருடத்தை சகித்துக் கொண்டிருக்க தீா்மானித்துள்ளதாகவும், முதலமைச்சருக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி தயாராகுவதாக வெளியாகின்ற சில செய்திகளில் உண்மையில்லை எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

1987 ஆண்டு காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கபட இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகத்திற்கான முதலமைச்சராக பரிந்துரைக்கப்பட்ட பெயா்களில் சி.வி.கே. சிவஞானமும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts