தலைவர் பிரபாவின் பிறந்த தினம்! யாழ். நகரில் ரோந்து, சோதனை தீவிரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாரகரனின் 60 பிறந்த நாள் இன்றாகும்.இதையொட்டி யாழ்ப்பாணத்தில் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் குடாநாட்டின் ஆலயங்கள், தேவாலயங்கள் என்பனவும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேசமயம் யாழ். நகரப்பகுதியில் இன்று காலை விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்துடன் வெளியான பத்திரிகையை வாசித்தக் கொண்டிருந்த மூவர் இராணுவத்தினரால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோன்று வெதுப்பகத்தில் உணவுப் பொருட்கள் வாங்கச் செல்பவர்களையும் இராணுவத்தினர் அவர்கள் என்ன வாங்கிச் செல்கின்றனர் எனவும் சோதனையிட்டுள்ளனர்.

Related Posts