தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஏ பீ டிவில்லியர்ஸ் அறிவிப்பு

தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியில் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பிரபல துடுப்பாட்ட வீரர் ஏ பீ டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

AB de Villiers

தொடர்ந்தும் காயத்தினால் அவதிப்பட்டுவரும் டிவில்லியர்ஸ் நடைபெறவுள்ள இலங்கைக்கான தொடரில் விளையாடுவதாக இருந்த நிலையில், காயத்திலிருந்து பூரணமாக குணமடைய இன்னும் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவ அறிவுறுத்தலை அடுத்தே இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் விளையாடமுடியாமல் போனதும், தற்போழுது நடைபெறவுள்ள தொடரில் விளையாடுவது சந்தேகமாகவுள்ளதுமே ஓய்வுபெற காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்ற தொடர்களில் அணியின் தற்காலிக தலைவராக சிறப்பாக செயற்பட்ட பெப் டு பிளசிஸ் டெஸ்ட் அணியின் நிரந்தர அணித்தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts