தலைவரின் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் உயிருடன் உள்ளார்கள்!!

நான் அறிந்த வகையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் உயிருடன் இருக்கலாம். ஆனால் அதை நான் சவாலுக்குட்படுத்த விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,”2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் தேசிய தலைவர் பிரபாகரனின் பெற்றோர் இராணுவத்தின் பிடியில் சென்றார்கள். அதன் பின்னர் பலாங்கொடை இராணுவ தடுப்பு முகாமில் வைக்கப்பட்டார்கள்.

இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை காலமானார். இந்த தகவலை கேள்விபட்டவுடன் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது. அதனை விசாரிக்க வேண்டும் என அப்போதைய ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை முன்வைத்தேன்.

இதனை தொடர்ந்து சில மணிநேரத்திலே விடுதலைப் புலிகளின் தலைவரின் அக்கா கனடாவிலிருந்து என்னை தொடர்பு கொண்டார். தந்தை இறந்துவிட்டார் தாயார் தனியாக இருப்பார் என என்னிடம் அழுதார்.

பின்னர் தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதி கிரியைகளை நான் செய்தேன். இதன் பின்னர் மதிவதனியின் சகோதரி என்னை தொடர்பு கொண்டார். நாங்கள் இருவரும் சந்திப்பது பற்றி உரையாடினோம்.

இந்த அடிப்படையில் தான் நான் கூறுகின்றேன் விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் உயிருடன் இருப்பார்கள். ஆனால் அதை நான் சவாலுக்குட்படுத்த விரும்பவில்லை.”என கூறியுள்ளார்.

Related Posts