தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்னர் படை குற்றம்சாட்டியுள்ளது.

மாஸ்கோவில் இருந்து சென்ற தனியார் வர்த்தக விமானம், புறப்பட்டு 100 கிலோ மீட்டரில் வானில் இருந்து புகையுடன் கீழே விழுந்து நொறுங்கியது.

3 விமானிகளுடன் பயணம் செய்த 7 பேரின் பட்டியலில் ப்ரிகோஷின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ப்ரிகோஷின் சென்ற விமானத்தை திட்டமிட்டே ரஷ்ய விமானப் படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

இதற்கிடையே, வாக்னர் படையினர் வெளியிட்ட காணொலியில், “ப்ரிகோஷின் உயிரிழந்ததாக தகவல் பரவி வருகின்றது. அவ்வாறு அவர் உயிரிழந்தால், அதற்கு காரணம் புடின் அரசின் கொலை முயற்சிதான் என்று நேரடியாக நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ப்ரிகோஷின் மரணம் குறித்த தகவல் உறுதிசெய்யப்பட்டால், மாஸ்கோவை நோக்கி நீதிக்காக மீண்டும் அணிவகுப்போம் என்றும் அவர் உயிருடன் இருப்பது உங்களுக்குதான் நல்லது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சில ரஷ்யச் செய்தி நிறுவனங்களும் கூட ப்ரிகோஜின் விமானம் ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள்.

இருப்பினும், ரஷ்யா தரப்பில் இருந்து இதுவரை யாரும் இந்த விடயத்தை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts