தலைவராக லசித் மாலிங்க நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 4 ஆவது ஒருநாள் போட்டிக்கே லசித் மாலிங்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts