தலைவராக மெத்தியூஸ் – இலங்கை அணியில் சில மாற்றங்கள்

20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் உப தலைவரா தினேஷ் சந்திமால் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஜெப்ரி வெந்தசே ஆகியோருக்கு பதிலாக சுரங்க லக்மால் மற்றும் லகிரு திருமானே ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

பதினாறு அணிகள் பங்கேற்கும் 6-வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் 20க்கு இருபது போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக இருந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே மெத்யூஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts