தலைமன்னார் – ராமேஸ்வரம் தரைவழி பாலம் குறித்து மோடி ஆலோசனை

இலங்கையின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

modi

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பாரிய தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் தரைவழி இணைப்பு பாலத்தை் அமைப்பது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள திட்டம் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார வல்லுனர்களுடன் கலந்துரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியாவுக்கு தனது முதல் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், எதிர்வரும் 15ஆம் திகதி நடத்தவுள்ள பேச்சுக்களின் போதும், இந்த தரைவழிப்பாதை திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts