தலைக்கு தம்பியான நடிகர்!

“தல 57” படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் நடிக்க உள்ளார்.

தல 57 படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வ பெயர் வைக்கப்படாவிட்டாலும்,அந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை பார்க்கும் போது படம் பிரம்மாண்டமாக உருவாகிறது என்பது மட்டும் நன்றாக புரிகிறது.படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,சமீபத்தில் தல 57 படப்பிடிப்பில் இணைய உள்ளதாக கமல்ஹாசனின் மகளில் அக்‌ஷரா ஹாசன் தெரிவித்திருருந்தார்.

vivek1

இந்நிலையில் புதுவரவாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தல 57 படப்படிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதுவரை விவேக் ஓபராய் தல 57-இல் நடிப்பது உறுதியாகாத நிலையில்,அதனை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

“நான் என்னுடைய முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளேன்.இந்த படத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அஜித் குமாருடன் நடிக்க உள்ளேன்.நான் அவரை அஜித் அண்ணா என்றுதான் அழைப்பேன்.நான் இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் அஜித் அண்ணாவுடன் நடிப்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.”என விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

ரத்த சரித்திரம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த விவேக் ஓபராயின் தாய் ,தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts