தலைக்கவசம் குறித்து இனி பொலிஸார் கூடிய கவனம்!

bike-helmetsமோட்டார் சைக்கிள் செலுத்தும்போது தலைக்கவசம் அணிவது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1981 21ம் இலக்க மோட்டார் வாகன போக்குவரத்து சட்ட 158 (2) மற்றும் 237 சரத்துக்களில் புதிய ஏற்பாடுகளை தற்போதைய போக்குவரத்து அமைச்சர் சேர்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தலைக்கவசத்தின் பட்டிகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், முகம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் தலைக்கவசம் காணப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

புதிய ஒழுங்கு விதிகளுக்கு அமைய தலைக்கவசம் அணிகின்றவர்கள் தொடர்பில், வாகனப் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Related Posts