தலைக்கவசம் அணியாமல் வேகக்கட்டுப்பாட்டு இல்லாமல் மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞன் குருநகர் சேமக்காலைக்கு திரும்பு வளைவுடன் மோதுண்டதில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவத்தில் செல்வராசா றுபின் வயது 19 என்பவரே உயிரிழந்தவராவார்.
மேலும் இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் எவர் சென்றாலும் எக்காரணம் இல்லாமல் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுக்கு அதிஉயர் தண்டனை வழங்கப்படும் என்றும் யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி அருனகுமார ஜெயவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.