தலைக்கவசம் அணியாத பாடசாலை மாணவர்களுக்கு தண்டம்!

தலைக்கவசம் அணியாது பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற 25 பேருக்கு சாவகச்சேரி காவற்துறையினர் தண்டம் விதித்துள்ளனர்.

யாழில் பெரும்பால இடங்களில் தலைக்கவசம் அணிவிக்காது பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் பலர் ஏற்றி சென்று வரும் நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி காவற் துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொறுப்பதிகாரியின் உத்தரவின் கீழ் போக்குவரத்து காவற் துறையினர் தலைக்கவசம் அணிவிக்காது மாணவர்களை ஏற்றி சென்றவர்களுக்கு தண்ட பணம் விதித்தனர்.

நேற்றைய தினம் அவ்வாறாக 25 பேருக்கு தண்ட பணம் விதித்துள்ளனர். அத்துடன் மாணவர்களாக இருந்தாலும் தலைக்கவசம் அணிவித்தே மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்ல வேண்டும் என கடுமையாக எச்சரித்த காவற் துறையினர் இனிவரும் நாட்களில் இதே தவறை புரிந்தால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.

அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் தாம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் , எனவே மாணவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வோர் கட்டாயம் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்து அழைத்து செல்லுமாறு கோரியுள்ளனர்.

Related Posts