தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் செய்த அரசியல்வாதிகள்

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடாத்த வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்கள் கினித்தேன பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்பாக தலைகீழாக நின்று 14.06.2016 அன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

photo-5-1-head

அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே மேற்படி இருவர் தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. எனினும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் பிரதேச சபைகள் செயலிழந்து காணப்படுகின்றது.

நாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகரசபை மற்றும் பிரதேச சபைகளால் உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Posts