தலிபான் தாக்குதலால் எரியும் தாங்கிகள்

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலுக்கு வெளியே டசின் கணக்கான பெட்ரோலிய தாங்கிகள் மீது தாம் ராக்கட் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

taliban-petrol

வெள்ளியன்று பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரவு முழுவதும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடியபோதும், இன்று காலையும் தீ எரிந்தவாறு இருந்தது.

சர்வதேச படைகளுக்கான பெட்ரோலை விநியோகம் செய்வதாக சந்தேகிக்கப்படும் இந்த தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Posts