தற்போதைய காலகட்டத்தில் அஸ்வின் தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்: முரளிதரன்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் இலங்கை அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து கூறியதாவது:-

aswin-murali

தற்போதைய காலக்கட்டத்தில் இந்திய வீரர் அஸ்வின் சிறந்த டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர். டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களில் அவர் தான் முதன்மையில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் லயன் சிறந்த ஆப்-ஸ்பின் பவுலர். இதை அவர் டெஸ்ட் போட்டியில் நிரூபித்து இருக்கிறார். சுழலும் ஆடுகளத்தில் நிறைய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருக்கிறார்.

இலங்கை அணியில் முன்னணி வீரர்கள் சமீபத்தில் ஓய்வு பெற்றதால் அணி பலவீனமாக இருக்கிறது. இதனால் இலங்கைக்கு எதிரான தொடரை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts