தற்போது யாழில் பாலியல் கல்வி மிக அவசியமாகும்: வைத்தியர் யோகேஸ்வரன்

தற்போது யாழ். குடாநாட்டில் பாலியல் கல்வி செயற்திட்டம் கட்டய தேவையாக உள்ளது என யாழ். மாவட்ட தொற்றா நோய்கள் பிரிவு வைத்திய அதிகாரி வி.யோகஸ்வரன் தெரிவித்தார்.யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

“யாழில் போதைப்பாவனை அதிகரித்துச் செல்கின்ற அதேவேளை பாலியல் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துச் செல்கின்றன. எனவே பாலியல் தொடர்பாக விஞ்ஞான ரீதியான தகவல்கள் மாணவர்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டும்.தொற்ற நோய்களின் வீதம் யாழ்ப்பாணத்தில் தற்போது கட்டுப்பாட்டு நிலையில் இருப்பதினால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளின் மூலமே தொற்ற நோய்களின் தாக்கத்தை குறைக்க முடியும்” என்றார்

Related Posts