தரைவழிப் பாதையை அமைப்பதில் இந்தியா கவனம்

இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தில் இந்தியா கவனம் செலுத்தியிருப்பதாக, இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை தலைவழிப்பாதை வழியாக இணைக்கும் திட்டங்களை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது.

பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை இணைத்து தரை வழிப்பாதை அமைப்பது போன்று, இலங்கைக்கும் கடலுக்குடியிலான சுரங்கம் மற்றும், கடலுக்கு மேலான பாலம் மூலம் தரைவழிப்பாதையை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

24 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்க தயாராக உள்ளது.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் புதுடெல்லி வந்திருந்த போது, இந்த திட்டம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பேச்சுக்களை நடத்தினார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts