தரம் 7 புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனத் தாளில் அச்சடிப்பு: மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் செயலாளரான வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனம் கலந்த காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

குறித்த இரசாயன காகிதத்தினால் அச்சிடப்பட்ட 5 இலட்சம் புத்தகங்களுக்கு கடந்த வருடம் அரசாங்கத்தினால் 15 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தற்போது அதில் 2 இலட்சம் புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

குறித்த புத்­த­கத்தின் காகி­தத்தில் அசற்­றோ­பினோன், பென்­ச­லி­டி­கயிட், பென்­சயில் அற்­ககோல், பென்­சோ­பினோன் போன்ற இர­சா­ய­னங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. அதனால் மாண­வர்­களின் கண்­பார்­வைக்கு தீங்­கேற்­ப­டுத்­து­வ­துடன் உடல் நல ஆரோக்­கி­யத்­துக்கு கேடும் விளை­விக்கும். அத்­துடன் குறித்த காகிதத்தால் சுற்­றாடல் பாதிப்பும் ஏற்­படும்.

குறித்த புத்தகங்களை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உடனே மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்தார்.

Related Posts